ஜெயலலிதா நினைவிடத்தில் 'ஜெயலலிதாவின்' சிலை!

Must read

சென்னை,
றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பிளாஸ்டிக்கிலான சிலை தற்காலிகமாக அதிமுக வினரால்  நிறுவப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாக கடந்த 5ந்தேதி இரவு காலமானார். அதைத்தொடர்ந்து அவரது உடல் சென்னை கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்திலேயே 6ந்தேதி அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா சமாதியில் வைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலை

அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் சாரை சாரையாக திரண்டு வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தியும்,  மொட்டை போட்டும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதன் காரணமாக அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுதியாகவும், மக்கள் கூட்டமாகவும் காணப்படுகிறது.  சமாதிக்கு வரும் பெண்கள் பெரும்பாலானோர் ஜெயலலிதா மறைவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள்.
நேற்று அமைச்சர்கள் உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், ஆகியோர் ஜெயலிலதா சமாதியில் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்குமார் என்பவர் ஜெயலலிதா சமாதியில் பிளாஸ்டிக்கினால் (பைபர்) வடிவமைத்த ஜெயலலிதாவின் மார்பளவு சிலையை  வைத்துள்ளார். மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதாவின்  சமாதியில் வைக்கப்பட்டுள்ள அவரது  உருவப்படத்தின் அருகே இந்த சிலை வைக்கப்பட்டு உள்ளது
சமாதிக்கு வரும் பொதுமக்கள் ஜெயலலிதாவின் உருவச்சிலையையும் பார்த்து செல்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு இட்லியால் அஞ்சலி
இதனிடையே தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்தினர். ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தை தொடங்கி ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி அனைவரது மனங்களிலும் இடம் பிடித்த ஜெயலலிதாவுக்கு நன்றி செலுத்தும் வகையில் 68 கிலோ இட்லியால் அவரது உருவம் செய்து பார்வைக்காக வைத்தனர்,
இட்லியால் அஞ்சலி

பின்னர் அவரை நினைவு கூறும் வகையில் அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் மனமுருக அஞ்சலி செலுத்தினர்.

More articles

2 COMMENTS

Latest article