சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில், திருப்பூரில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். பின்னர் இது தங்களது வங்கி பணம் என்று எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் தெரிவித்ததால், அது எஸ்.பி.ஐ வங்கி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து நக்கீரன் இதழில் இந்த தொகையை முதல்வர் ஜெயலலிதாவை இணைத்து செய்தி வெளியிட்டதாகவும், அது முதலவர் ஜெயலலிதாவின் நற்பெருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தவழக்கை ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தொடர்ந்தார்.