ரவுண்ட்ஸ்பாய்
ரவுண்ட்ஸ்பாய்

ணக்கமுங்க.. நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசறேன்.
நாலஞ்சுநாளா ஒரு இலக்கிய சர்ச்சை. “இதுபத்தி எழுதுங்க சார்”னு எடிட்டருக்கு அட்வைஸ் பண்ணேன்.  பட், அவரு கேக்கலை. சரி, நாமளே எழுதுவோம்னு முடிவு பண்ணிட்டேன்.
சரி, மேட்டருக்கு வருவோம்..
தலைப்பை படிச்சோன குழம்பிட்டீங்களா?   ஜெயலலிதா  தெரியும்.. மாலதி மைத்ரி, லீனா மணிமேகலை எல்லாம் யார்.?” னு  தோணுதா..   அப்படின்னா நீங்க அரசியல் செய்திங்களை மட்டும் படிக்கிற ஆளுங்கன்னு அர்த்தம்.
மாலதி, லீனா ரெண்டு பேருமே இலக்கிய ஆளுமைகள். அதாங்காட்டி, இருவருமே இலக்கியவட்டாரத்தில் பலராலும் அறியப்பட்டவங்க.
இந்த லீனா மணிமேகலை அப்பப்ப ஏதாவது சர்ச்சையில சிக்குவார். இல்லேன்னா சர்ச்சையை உருவாக்குவார் அப்படின்னு ஒரு விமர்சனம் உண்டு.
லீனா
லீனா

சமீபத்துல அவரோட பேஸ்புக் பக்கத்துல வழக்கம்போல ஒரு கவிதை எழுதினார். ஏனோ அது கவிதையா இல்லையான்னு சர்ச்சை வரலை. பட், அதுல எழுதியிருந்த சில விசயங்கள் சர்ச்சையாயிட்டு!
பதிலுக்கு கவிஞர் பழனிவேள் அப்படிங்கிறவர், அந்த கவிதை பத்தி விமர்சனம் வச்சார்.   எழுத்தாளர் ப்ரேம் அப்படிங்கிறவரும் சில கருத்துகளை முன்வச்சாரு. இதற்கு லீனா எழுதின பதில் (அடி) கடுமையான விமர்சனத்துக்கு ஆளாயிடுச்சு.
இதுக்கு எதிர்வினையா.. அதாவது, பதிலடியா, “அவதூறுகளின் விரல் பற்றி ஒளிரும் ஆளுமைகள்” அப்படிங்கிற தலைப்புல லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கையை சில ஆளுமைகள் சேர்ந்து வெளியிட்டாங்க.
அதுக்கு பதில் அளிக்கிறப்பதான் லீனா மணிமேகலை, முதல்வர் ஜெயலலிதாவையும் இந்த இலக்கிய(!) சர்ச்சையில இழுத்திருக்காங்க!
ஜெயா - மாலதி
ஜெயா – மாலதி

அவங்க அறிக்கையை படிப்போமா..
“ஜெயலலிதாவிற்குப் பிறகு சொன்ன பொய்களையே திரும்ப பேசுவது, அவதூறு வழக்கு போடுவது, தன் “அவை மந்திரிகளை” வைத்து அறிக்கைகள் வெளியிடுவது என ரொம்ப பிசியாக இருப்பது மாலதி மைத்ரி தான். ப்ரேமும் மாலதி மைத்ரியும் தங்கள் கேவலமான நடத்தையை மறைப்பதற்கு, தங்கள் பிள்ளையை பலி கொடுப்பது கொடூரமான விளையாட்டு.
இது பாண்டிச்சேரியில் இருக்கும் ரமேஷுக்கு தெரியுமா தெரியவில்லை.
எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. என் மேல் மாலதி கம்பெனி தொடுத்திருக்கும் அவதூறுகளுக்கு நான் கிரிமினல் வழக்கு தொடுத்தால், பிரேமிற்கு தான் இழப்பு.
யப்பா..  அதிகாரி தேவேந்திர பூபதி, கவிஞர்களோட வறுமையைப் பயன்படுத்தறது பத்தாம பொய் அறிக்கைகள்ல கையெழுத்து போட்டாவது இலக்கியவாதி ஆயிடலாம்னு நினைக்கிறது ரொம்ப தப்புக் கணக்கு!
மு.வி.நந்தினின்னு ஒரு பத்திரிக்கையாளர். இதுக்கு முன்னாடி கூட சூரியக்கதிர் ன்னு ஒரு பத்திரிக்கைக்கு வம்படியா குட்டி ரேவதியையும் என்னையும் வச்சு சர்ச்சை பண்ணாங்க. இவங்க இப்ப ஒரு இணைய இதழ் நடத்தறாங்களாம். அந்த இதழில் முகநூலில் நடக்கிற உரையாடல்களை சம்மந்தப்பட்டவங்க யார் கிட்டயும் கலந்துக்காம, தலையும் இல்லாம வாலும் இல்லாம காபி-பேஸ்ட் பண்ணி ஒட்டி இதழியல் பண்ணுவாங்களாம். இதெல்லாம் ஒரு பொழப்பு. இந்தம்மா நடத்தற மஞ்சள் பத்திரிகை லிங்க் தான் இந்த அறிக்கைக்கு சாட்சி. Puppy Shame!
மாலதி மைத்ரியின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் பத்து பேர் தவிர அறிக்கையில வேற எந்த பெயரும் எனக்கு தெரியல. இதுக்கு முன்னாடி வெளியிட்ட அறிக்கையிலே கேட்காமலேயே போட்டுக்கிட்ட பெயர்களில் கூட சிலர் பொருட்படுத்தறவங்களா இருந்தாங்க. வேலை இருப்பவர்களுக்கு ஒரு வேலை. இல்லாதவர்களுக்கு பல வேலைகள். காட்டறது தான் காட்டறீங்க, பயப்படற மாதிரி பூச்சாண்டி காட்டுங்க மக்களே!
 
Update: அறிக்கையில் பெயர் இருந்தவர்களில் எனக்கு தெரிந்த இரண்டு பேரை விசாரித்ததில், தாமிராவிற்கு அறிக்கை குறித்த கேள்வி ஞானம் கூட இல்லை, மதியழகன் சுப்பையா அறிக்கை குறித்து இப்பொது தான் விசாரிக்க கிளம்பியிருக்கிறார். மாலதி மைத்ரி – உங்களுக்கு ஏன் இந்த வெட்கம் கெட்ட வேலை?”

  • இதான் லீலாவோட அறிக்கை. அடுத்த எதிர் நடவடிக்கை என்னான்னு பார்ப்போம்.. !