ஜெயலலிதா தொடங்கி வைத்தபோது

சென்னை,

முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட கேபிள் டிவி தற்போது மூடுவிழா காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட, எதிர்க்கப்பட்ட பல்வேறு பணிகளை  தற்போது எடப்பாடி அரசு கவனத்தில் கொள்ளாமல் தவிர்த்து வருகிறது. அதுபோல ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி சேவைக்கும் மூடுவிழா காணு இருக்கிறது எடப்பாடி அரசு.

தனியார் டிவிக்களின் கொள்ளை வசூலில் இருந்த தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் டிவி நிகழ்ச்சிகளை காணும் வகையில்,  20.10.2012 அன்று அப்போதைய  முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது அரசு கேபிள் டிவி சேவை.

இந்நிறுவனத்தின்மூலம் 100 தரமான தெளிவான சேனல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் வாயிலாக மாதம் ரூ.70 என்னும் குறைந்த கட்டணத்தில் சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சந்தாதாரர்களுக்கு அளித்து வருகிறது.

தற்போது இந்த நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்புக்க  மத்திய அரசு விதித்த கெடு முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதுவரை அரசு கேபிள் நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்காததால், அரசு கேபிள் டிவி சேவையை அரசு மூட விரும்புவதையே எடுத்துக்காட்டுகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மத்திய அரசுடன் இதுகுறித்து நடத்திய பல கட்ட போராட்டத்தை தொடர்ந்து,, 2017, மே மாதம்,கேபிள், ‘டிவி’ சேவையை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வழங்குவதற் கான உரிமத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, ‘டிராய்’ வழங்கியது.

அப்போது, இரண்டு மாதத்திற்கு, அதாவது, ஜூலை, 17க்குள், அதை வழங்கும்படி உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, டிஜிட்டல் ஒளி பரப்புக்கு தேவையான, ‘செட் – டாப்பாக்ஸ்’களை கொள்முதல் செய்ய, அரசு கேபிள் நிறுவனம், டெண்டர் கோரியது.

அந்த டெண்டரை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட் டதால்,உரிமம் ரத்து செய்வதற்கான இறுதி கெடுவை, ஆக., 17 வரை நீட்டிக்க, தமிழக அரசு, அனுமதி பெற்றது.இந்நிலையில், ‘செட் – டாப் பாக்ஸ்’ டெண்டர், ரத்தானது.

அதன்பின், மீண்டும் புதிதாக, டெண்டர் கோரப்பட்டது. எனினும், இதுவரை, டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், மத்திய அரசு அளித்த கெடு முடிவதற்கு, இன்னும் ஏழு நாட்களே அவகாசம் உள்ளது.

அதற்குள், ‘செட் – டாப் பாக்ஸ்’களை கொள்முதல்  செய்து, மக்களுக்கு வினியோகிப்பது சிரமம். அதனால்,டிஜிட்டல் உரிமம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு அறிவித்தபடி, ‘செட் – டாப் பாக்ஸ்’ இலவசமாக கிடைக்கும் என, பொது மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பதில் கூற முடியாமல் அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில்  14,66,336 சந்தாதாரர்களைக் கொண்ட 2577 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இந் நிறுவனத்தில் பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக  அரசு இந்த விஷயத்தில் மேல்நடவடிக்கை எடுக்காததால்,  ஜெயலலிதா தொடங்கப்பட்ட சேவைக்கு எடப்பாடி அரசு  மூடுவிழா காணுகிறது.