வரலாறு முக்கியம் அமைச்சரே…
தலைப்பைப் பார்த்தவுடன் குழப்பமாக இருக்கிறதா..?
தொடர்ந்து படியுங்கள்…
அரசியல் ரீதியாக வேறு அணியில் இருந்தாலும், ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று தகவல் விசாரித்துவிட்டு வந்திருக்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
‘‘மருத்துமனையின் இரண்டாவது மாடிக்கு சென்றேன். முதல்வரை சந்திக்கவில்லை. ஆனால் மூத்த அமைச்சர்களிடம், முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன்” என்றவர், “விரைவில் அவர் குணமடைந்து தனது பணிகளை தொடருவார்’’ என்று வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2015ம் ஆண்டிலும் இதே போல ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றிய உறுதிப்படுத்தமுடியாத செய்திகள் பரவியது.. பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திருமாவளவன் சொன்னதுதான் இந்த செய்தியின் தலைப்பு.
அப்போது அவர், ”தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பலவாறான வதந்திகள் வெளி வருகின்றன. அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தால் அவர் நலம் பெற்று வர வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் பிரார்த்திக்கிறேன். இது குறித்து முதலமைச்சர் அலுவலகமோ, அ.தி.மு.க. தலைமைக்கழகமோ அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் திருமா.
(ஆனால் இந்த அளவுக்கு வதந்திகளும் இல்லை பரபரப்பும் இல்லை, அப்போது!)