
கொளத்தூத்தூரில் இறுதி கட்ட பிரசாரத்தில் நேற்று ஸ்டாலின் கூறியதாவது:
“தண்டனை பெற்று, விடுதலை வாங்கிய ஜெயலலிதா, இன்னுமும் திருந்தவில்லை. வேளச்சேரி அருகே ஆயிரம் கோடி ரூபாயில் சினிமா தியேட்டர் வாங்கியிருக்கிறார்கள். 900 ஆயிரம் ஏக்கர் பங்களாவில் உல்லாசமாக வசிக்கும் ஜெயலலிதா, தவ வாழ்வு குறித்து பேச அருகதை அற்றவர். மக்கள் நலபணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது, செம்மொழி பூங்காவை முடக்கியது என்று ஆணவமாக செயல்படுகிறார்.
110 விதியின் கீழ் அறிவிக்கும் திட்டம் ஏதும் நிறைவேற்றபட்டதா?
ஜெயலலிதா ஆட்சியில் கொலை, கொள்ளைகள் பெருகியது தான் அவரது ஆட்சியின் சாதனை.
தமிழகம் தொழில் துறையில் பின்தங்கி போய்விட்டது.
இப்படிப்பட்ட ஆட்சி நமக்கு தேவையா என்பதற்கு பதில் சொல்லும் நாள் தான் வரும் 16 ம் தேதி.
வேலைவாய்ப்பின்மை, தொழிற்சாலைகள் மூடல் என்பதுதான் ஜெயலலிதா, ஆட்சியில் நடந்தது.
இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பை பெற்று தரும் தி.மு.க. ஆட்சி மலர வாய்ப்பு தாருங்கள்” என்று ஸ்டாலின் பேசினார்.
Patrikai.com official YouTube Channel