சென்னை,

டந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, வேட்பாளர் படிவத்தில் கைரேகை வைத்தது குறித்த வழக்கில் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்  அதிமுக எம்.எல்.ஏ போஸ் வெற்றிக்கு எதிரான வழக்கில், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  பி-படிவத்தில் ஜெலலிதாவின் பெருவில் ரேகை வைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில்  போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரின் வேட்பு மனுவில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரது சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில்,  ஜெயலலிதாவின் கைரேகையை ஏற்று அ.தி.மு.க வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் கடந்த விசாரணையின்போது, இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது, தேர்தல் படிவத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கைரேகை உண்மையா நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர், அடுத்த விசாரணை நடைபெறும் அக்டோபர் 6ந்தேதி  நேரில் ஆஜராக வேண்டும்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.