டில்லி:

றைந்த முதல்வர் ஜெயலிதா கைரேகை தொடர்பான வழக்குக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை விலக்கக்கோரி, திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணனன் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.‘

ஜெ. கைரேகை தொடர்பான வழக்கில்,  மதுரை  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள கைரேகை குறித்த வழக்குக்கு  தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ந்தேதி உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், ஜெ. கைரேகை தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி யிடம்  விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் விசாரணையின்போது முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக ஜெ. மரணத்தின் மீதான சந்தேகம் மேலும் வலுத்து வருகிறது.

இந்நிலையில், ஜெ.கைரேகை தொடர்பான சென்னை உயர்நீதி மன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு மருத்துவர் சரவணனன் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதா கைரேகை தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் வெளிவருவதால் தடையை நீக்க வேண்டும் என்று கோரி உள்ளார்.