சென்னை:
ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலிலதா மரணமடைந்துவிட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பியவர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா - தமிழச்சி
ஜெயலலிதா – தமிழச்சி

கடந்தவாரம் வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலிவு காரமணாக சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும், தற்போது நலமாகிவிட்டார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதே நேரம் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு அவசியம் என்றும் அறிவித்தது.
தமிழச்சி பதிவு
தமிழச்சி பதிவு

அதே நேரம் முதல்வர் உடல் நலம் குறித்த வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தன. இந்த நிலையில் “தமிழச்சி” என்ற பெயரில் பேஸ்புக்கில் இயங்குபவர் நேற்று (20.09.2016)  மாலை, “தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரமரணம்” என்று பதிவிட்டார். மேலும், “இரண்டு நாட்களுக்கு முன்பே ஜெயலலிதா இறந்துவிட்டார்” என்றும் எழுதியிருந்தார். இது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
தமிழச்சி மீது புகார்
தமிழச்சி மீது புகார்

சமூகவலைதளங்களில் பலரும் இந்த தமிழச்சியை கண்டித்தனர். இவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும் என்றும் பலர் பதிவிட்டனர். உண்மையிலேயே தமிழச்சி மீது புகார் கொடுத்துவிட்டார் அரவிந்த் அக்சன். தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளரான இவர், சென்னை சைபர் க்ரைம் காவல்துறையிடம், முகநூல் மூலமே தமிழச்சியின் பதிவு குறித்து புகார் அளித்தார். அவர்களும் பதிலுக்கு,  தகுந்த நடவடிக்கை எடுப்பதாக பதில் அனுப்பியுள்ளார்கள்.
அரவிந்த் அக்சன்
அரவிந்த் அக்சன்

இதையடுத்து பேஸ்புக் தமிழச்சி மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.