நான் இந்து,  ஆனா இந்துத்துவவாதி அல்ல..!

Must read

நெட்டிசன்:
சமீபத்தில் இந்துத்துவ அமைப்புகள் கோவையில் நடத்திய கலவரம், பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.  பலரும் பல்வேறு விதங்களில் தங்கள் எண்ணங்களை சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.
“தமிழன் .க” (Tamizhan Ka) அவர்கள் முகநூலில் தனது எண்ணத்தை பகிர்ந்திருக்கிறார்.
 அந்த பதிவு:

நேதாஜி - கோட்சே
நேதாஜி – கோட்சே

“எங்கள் உயிரினும் மேலான இந்து சகோதரான்னு R Kesava Raman Konar என்பவர் ஒரு நீண்ட தனிச்செய்தி அனுப்பி இருக்கிறார்.. எனக்கு மட்டுமல்ல.. நிறைய பேருக்கு அனுப்பி இருக்கிறார் என்று நினைக்கிறேன்..
அதற்கான பதிலை இங்கே சொல்றேன்.
செய்தி அனுப்பியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வார்த்தைகள் மிகவும் உருக்கமா இருக்கு.
யாருமே இங்கே சசிகுமாரின் கொலையை ஆதரிக்கல.. போலீஸ் விசாரணை செய்து யார் குற்றவாளி என்று அடையாளம் காணும் முன்னரே, கலவரம் செய்து காலித்தனம் செய்ததைத்தான் எல்லோரும் கண்டிக்கிறார்கள்.
இந்து நாயேன்னு கூப்பிட்டா எனக்கு கோவம் வரும்.
டவுசர் நாயேன்னு கூப்பிட்டா எனக்கு கோவம் வராது..  வரவும் தேவையில்லை.. ஆனா மூச்சுக்கு முன்னூறு தடவை “துலுக்க நாயே” என்றும், “துலுக்கன் கடையில இனி சாப்பிடாதேன்னு”-ம் ஒட்டுமொத்தமாக கூவுறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
துலுக்கன் கடையில் சாப்பிடாதே என்று நீங்கள் சொல்லும்போது, அப்போ திருடித் திங்கலாமா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது… உடனே ஒட்டுமொத்தமா இந்துக்களையும் பிரியாணி திருடர்கள் என்று சொல்லலாமா என்று கதை கட்டிவிடுகிறீர்கள்.
சுபாஷ் சந்திர போஸ் – இந்து
கோட்ஸே – இந்துத்துவா..
முன்னது ஆக்க சக்தி மற்றும் வீர சக்தி ..
பின்னது அழிவு சக்தி..
இந்து மக்கள் ஈழத்தில் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டது போது, இந்த இந்த்துத்துவா சக்திகள் கொதித்து எழவில்லை..
பக்கத்தில பெங்களூருவில் தமிழ் இந்து மக்கள் அதே இந்துத்துவா தீவிரவாதிகளால் சூறையாடப்பட்ட போது இங்கே உள்ள இந்துத்துவ சக்திகள் ஒன்றும் செய்யவில்லை.
இந்து முன்னணியையும், இந்து மக்கள் கட்சியையும் இன்னும் பிற இந்துத்துவா அழிவு சக்திகளையும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக கற்பனை கதைகளை கட்டிவிட்டு, இந்து மக்களை வெறி ஏற்றி பலியாக்காதீர்கள்.
அப்புறம், இன்னொன்னு.. தனிப்பட்ட நட்புரீதியான விஷயங்களுக்கு மட்டும் தனிச்செய்தி அனுப்புங்கள்.. இந்துத்துவாவிற்கு ஆதரவு கோரும் செய்திகளை, உங்கள் பக்கத்திலே வெளியிடுங்கள்.
#  நான் இந்து, ஆனா இந்துத்துவவாதி அல்ல..!
 

More articles

Latest article