சென்னை:
ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்த, அவரது முன்னாள் வளர்ப்புமகன் வி.என். சுதாகரன் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருடன் உடன்பிறவா தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர் இளவரசியும் மட்டுமே இருக்கின்றனர்.
su
கவர்னர், அமைச்சர்கள், கட்சித்லைவர்கள் எவரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. சசிகலாவின் உறவினர்களும் வந்து சென்றனர்.  யலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சந்திக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் இன்று மாலை சுமார் ஆறுமணி அளவில் மருத்துவமனை வந்தார். அவருக்கும் க்ரீ்ன் சிக்னல் கிடைக்கவில்லை. காரிலேயே அமர்ந்தபடி, மருத்துவமனையின் உள்ளே இருந்த தனது உறவினர்களை தொடர்புகொண்டார். அதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லை. இதையடுத்து எஸ்.எம்.எஸ். மூலம் அனுமதி கேட்டு காத்திருந்தார். அதற்கும் பதில் இல்லை.
ஆகவே காரிலேயே ஒரு மணி நேரம் அமர்ந்திருந்த அவர், சுமார் ஏழு மணி வாக்கில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.