தேனி:
ங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி இஸ்லாமிய காதல் ஜோடி, கம்பம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தாத்தப்பன்குளத்தை சேர்ந்த  ஆயிசா மற்றும் ஆயிசா இர்பான் ஆகிய இருவரும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.
3
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் இருபது நாட்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில்  இன்று, கம்பம் வடக்கு காவல் நிலையம் முன்பு ஆயிசா மற்றும் ஆயிசா இர்பான் ஆகிய இருவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்கள், “நாங்கள் இருவரும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனாலும் எங்கள் வீட்டில் எங்களது காதலை ஏற்கவில்லை.  இருபது நாட்களுக்கு முன்பு நாங்கள் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம். அதிலிருந்து எங்கள் குடும்பத்தார், எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்கள். நேற்றிரவு எங்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த இஸ்லாமிய காதல் ஜோடி, சாலை மறியலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.