சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தற்போது குணமடைந்துள்ளதால் அன்றாட அரசு அலுவல்களை கவனிக்க தொடங்கினார். இதனால் அப்பல்லோ மருத்துவமனை தலைமை செயலகமாக மாறி உள்ளது.
appollo-top
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டதால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சலும் குணம் அடைந்தது. அவர் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார். அவருக்கு போயஸ்கார்டனில் இருந்து உணவு கொண்டு செல்லப்படுகிறது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் வார்டில் உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா, இளவரசி ஆகியோர் ஆஸ்பத்திரியிலேயே தங்கி உள்ளனர்.
ஆஸ்பத்திரியில் 5-வது நாளாக இருக்கும் ஜெயலலிதா முழுமையாக குணம் அடைந்து விட்டாலும் இன்னும் டாக்டர்களின் தொடர் சிகிச்சை கண்காணிப்பில் உள்ளார். இதனால் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
முதல்வர் இன்னும்  ஓரிரு நாளில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை மருத்துவமனையிய்ல இருந்தபடியே முக்கிய அலுவலக பணிகளை மேற்கொண்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் காரணமாக தலைமைசெயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவமனை வந்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக அப்பல்லோ மருத்துவமனை தலைமை செயலகமாக மாறி வருகிறது.