வைகோ - ஜெயலலிதா
வைகோ – ஜெயலலிதா

தான் எடுத்த முடிவுகளில் மிகத் தவறான முடிவு, ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததும், விஜயகாந்தை முதல்வராக ஏற்றதும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனந்த விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் வைகோ சொல்லியதில் இருந்து:
“அரசியலில் முட்டாள்த்தனமான முடிவுகள் எடுத்திருக்கிறேன். அதைச் சொல்வதில் தவறில்லை.”
“நான் எடுத்த முடிவுகளில் மிகத் தவறான முடிவு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது. என்னை ஜெயில்ல வைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததால்  என் கிரிடிபிலிட்டி நொறுங்கி போய் போய்விட்டது. நம்பகத்தன்மை தரைமட்டமாயிடுச்சு!”
வைகோ - விஜயகாந்த்
வைகோ – விஜயகாந்த்

“விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால் என் இமேஜ் போய்விட்டது உண்மை.!”
“கலைஞருக்கு மிக விசுவாசமாக இருந்தேன். அவர் மேல தூசிகூட பட விடமாட்டேன்.  எனக்கு திருமணம் ஆன புதிது. என் மனைவியின் உறவினர்கள் பலர்,காங்கிரஸ்காரர்கள். அவர்கள், கருணைநிதி என்று சொன்னபோது கொதித்துப்போய்விட்டான். “ கலைஞர் என்று சொல்லுங்கள்” என்றேன்.”
 
விகடன் பேட்டியின் லிங்க்: (நன்றி: விகடன்)