ஜெயலலிதா 4வது நினைவுநாள்: நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை…

Must read

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில்அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்பட கட்சியின் முன்னணியினர் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறத. இதையொட்டி, அதிமுக தொண்டர்கள் அவரது படத்துக்கு விளக்கேற்றி சபதம் செய்யுமாறு ஓபிஎஸ் இபிஎஸ் ஏற்கனவே அறிக்கை கொடுத்திருந்தனர். இந்த நிலையில், ஜெயலலிதா  நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று  மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர். மேலும் அமைச்சர்கள், அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்து உறுதிமொழி ஏற்றனர்.

More articles

Latest article