சென்னை:
முதல்வர் புத்துணர்ச்சி பெறவே மருத்துவமனையில் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி இன்று கூறினார்.
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் தொற்றுகள் குணமாகி விட்டன. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்,.
அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. அதுபோல் எப்போது வேறு வார்டுக்கு மாற்றப்படுவார் என்பது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும், முதல்வர் வழக்கமான உணவுகளை சாப்பிட்டு வருகிறார் என்றார்.
முதல்வர் புத்துணர்ச்சி பெற வேண்டி உள்ளது. அதற்காகவே மருத்துவமனையில் இருக்கிறார். மற்றபடி அவர் மனதளவில் உடலளவிலும் திடமாகவே இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.