சென்னை,

ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெ.தோழி சசிகலா மற்றும் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனை தமிழ அரசு அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் ஜெ. மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையம் ஜெ.மரணம் குறித்து பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக முன்னாள் தலைமை செயலாளர்கள்  ஷீலா பாலகிருஷ்ணன்,  ராமமோகன் ராவ் ஆகியோர் ஆஜராகி விளக்கம்  அளித்தனர்.

ஏற்கனவே ஜெ.தீபா, மாதவன், திமுக மருத்துவர் சரவணன் உள்பட அரசு மருத்துவர்கள்  பலர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், தற்போது ஜெ.வின் உடன்பிறவா தோழியும், ஜெ. மருத்துவமனையில் இருந்தபோது, அவருடன் மருத்துவமனையில் இருந்தவருமான சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 15 நாட்களுக்குள் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார்.