சென்னை:

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்களவை துணை சபாநாய கரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை இன்று ஆஜராகி உள்ளார்.

கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. மரணமடைந்தார். சுமார் 75 நாட்கள் அப்போலோவின் சிகிச்சை பெற்று வந்தவர், குணமாகி வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது திடீர் மரணம் பல்வேறு யூகங்களை கிளப்பியது.

அதையடுத்து, ஜெ. மரணம் குறித்து  உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையத்தில் அரசு அதிகாரிகள் தொடங்கி ஜெயலலிதா, சசிகலா  வீட்டு பணியாளா்கள், உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்றைய விசாரணைக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்  ஆஜராகி, ஆணையத்தின் பல்வேறு கேள்விகளுக்கு சுமார் 6 மணி நேரம் விளக்கம் அளித்தார்.  அதைத் தொடர்ந்து   அதிமுக எம்பி தம்பிதுரை இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி உள்ளார்.