சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

அன்று காலை 8.30 மணியளவில் அ.தி.மு.க. சார்பில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.