சென்னை,

றைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலிதா மறைந்த முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொடி, இன்று அதிமுக சார்பில் மவுன ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்து மவுன ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

சென்னை அண்ணா சாலையில் இருந்து காலை 10 மணி அளவில் மவுன ஊர்வலம் தொடங்கியது. சுமார் 10.45மணி அளவில் ஊர்வலம் ஜெயலலிதாவின் சமாதியை அடைந்தது.

பின்னர் ஜெயலலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். துணைமுதல்வர் ஓபிஎஸ் சமாதியில் விழுந்து வணங்கி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து முதல்வரும் ஜெ.சமாதியில் விழுந்து வணங்கினார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்பட அதிமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெ.நினைவு தினம் காரணமாக அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து சென்னையில் குழுமியதால் சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முக்கிய சாலையான அண்ணா சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

[youtube-feed feed=1]