சென்னை:

தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா இல்லதை நினைவிடமாக்க, தமிழக அரசு உத்தரவிட்டது சட்டப்படி தவறு என தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்லார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின்தெரிவித்ததாவது:

• * கர்நாடக அரசு மேகதாது அணைகட்ட உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

• * ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது சட்டப்படி தவறு.தமிழக அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

• *ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க சிபிஐ விசாரணை கோரிய பன்னீர்செல்வம் தமிழக அளவிலான விசாரணை யை ஏற்றுக் கொண்டிருப்பதால்,தனக்கு கமிஷன் கொடுத்தால் போதும் என்பதை ஒத்துக் கொள்வாரா? டெல்லியில் இருந்து கதை,திரைக்கதை,இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். – இவ்வாறு மு.க.ஸ்டாலி்ன் தெரிவித்தார்.