சென்னை,
முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது  சென்னை உயர் நீதிமன்றம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்  வழங்கியுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் தமிழக முதல்வர்.
jeya
ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் ஆரம்பத்தில் வெளியாகததை பயன்படுத்தி சமூக வலைதளங்கள் மூலம் அவதூறுகள் பரவின. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து, அவதூறு குறித்து போலீசார் எச்சரிகை செய்தனர்.  அதன்பிறகும் தொடர்ந்து அவதூறு பரவியது.
அவதூறு பரப்பியவர்களில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன்  கேட்டு தாக்கல் செய்திருந்த மனு இன்று நீதிபதி மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது,
வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட மாடசாமி, சதிஷ் குமார், சகாயம் உள்பட 5 பேருக்கும் நிபந்தனையற்ற ஜாமீன்  வழங்கி உத்தரவிட்டுள்ளார்.