திருத்துறைபூண்டி அருகே விவசாயி தற்கொலை!

Must read

திருவாரூர்.
திருத்துறைப்பூண்டியில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ, விவசாயி.  இவர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நேரடி சம்பா சாகுபடி செய்திருந்தார்.
ஆனால், விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியது.  சுமார் 4 ஏக்கர் நிலம் முழுவதும் உள்ள பயிர்கள் அனைத்தும் கருகி முற்றிலும் பாதிப்பிற்குள்ளானதால் வேதனை அடைந்தார்.
விதை நெல் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று வழி தெரியாமல்,  வீட்டில் உள்ளவர்களிடம்  சொல்லி வேதனை அடைந்தார்.

விவசாயி கோவிந்தராஜ்
விவசாயி கோவிந்தராஜ்

இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த 1-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அக்கம்பக்கத்தில் கோவிந்தராஜை உறவினர்கள் தேடியுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடிக்கவில்லை. இதனால், அவர் காணாமல் போனது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை தேடி வயல்வெளிக்கு சென்றபோது, அங்கு கோவிந்தராஜ் இறந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உடலை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு போஸ்ட்மார்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் கோவிந்தராஜ் விஷம் அருந்தியே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
பயிர்கள் வாடியதால் வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்தே விவசாயி கோவிந்தராஜ் இந்த முடிவை எடுத்ததாக அவரது உறவினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

More articles

Latest article