சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை வந்த லண்டன் டாக்டர் பீலே நாடு திரும்பினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே நாடு திரும்பினார்.
jaya
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ந்தேதி நள்ளிரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நுரையில் தொற்று காரணமாகவும், நுரையீரலில் நீர்கோர்த்து உள்ளது காரணமாக மூச்சு விட சிரமப்படுவதாக வும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து பிரபல  மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஜான் பீலே கடந்த 30 -ஆம் தேதி சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தார்.
மருத்துவமனையில் முதல்வரின் உடல்நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள், உடல்நிலை குறித்த விவரங்கள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார்.
மேலும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர் குழுவினருடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையின் அடிப்படையில் நோய்த் தொற்றுக்கு முதல்வருக்கு ஏற்கெனவே வழங்கப்படும் சிகிச்சைகளோடு, நோய் எதிர்ப்புக்கான மருந்துகளை அளிக்கவும் பரிந்துரைத்தார். டாக்டர் பீலேவின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டாக்டர் பீலே லண்டன் புறப்பட்டுச் சென்றார்.