மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  இந்த மனுவை,  கீதா என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் குடும்ப நண்பர் என்று தன்னை  சொல்லிக்கொண்ட கீதா அளித்த மனுவில்,  அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, பதிவான சி.சி.டி.வி காட்சிகளை அம் மருத்துமனை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சசிகலா. ஓ.பன்னீர்செல்வம்  உட்பட 20 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கீதா குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை, இன்னும் சற்று நேரத்தில் வர இருக்கிறது.