
சென்னை
“அடையாற்றில் மீன்கள் செத்து மிதப்பதற்குக் காரணம், நன்னீர் அதிகமானதுதான்” என்று அரிய கண்டுபிடிப்பைச் சொல்லியிருக்கிறார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். “மடவை மீன்” வகை எந்த நீரையும் (உவர் மற்றும் நன்னீர்) சகிக்கும் தன்மை கொண்டது என்பதைக் கூட அறியாமல் அமைச்சர் பேசியிருக்கிறார்.
இவர் மீன்வளத்துறை அமைச்சர். சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் அடையாற்றில் விடப்பட்டதால்தான் மீன்கள் செத்தன என்பதை மறைக்கவே இவ்வாறு அவர் பேசுகிறார்.
ஏற்கெனவே அமைச்சர் செல்லூர் ராஜு, வைகை அணையின் நீர், ஆவியாவதைத் தடுப்பதற்கு “தெர்மோகோல்” பயன்படுத்தித் தன்னுடைய அறிவியல் அறிவை வெளிப்படுத்தினார்.
நொய்யல் நதியிலும் கோவையிலுள்ள நீர்நிலைகளிலும் “நுரை” அதிகமாக இருப்பதற்கு காரணம், கோவை மக்கள் அதிகமாக “சோப்பு” பயன்படுத்துவதுதான் என்று அறிவியல் விளக்கம் கொடுத்தார், சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்.
அமைச்சர்களின் இந்த செயல்பாடுகளை மக்கள் கிண்டலடிக்கிறார்கள்.. வேதனையுடன்.
அதே நேரம், “அந்த ஜெயலலிதா இவர்களை வைக்கிற இடத்தில்தான் வைத்திருந்தார். அவர் சிறந்த அறிவாளி” என்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களை கட்சியில் வளர்த்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து, அமைச்சராகவும் ஆக்கி அழகு பார்த்தவர் எந்தவிதமான நிர்வாகத் திறமை கொண்டிருப்பார் என்கிற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.
இந்த புத்திசாலி அமைச்சர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் ஜெயலலிதாதான் என்பதை பலர் மறந்துவிட்டார்கள்.
ஒரு உதாரணம்..
2004ஆம் ஆண்டு, தமிழகத்தை சுனாமி தாக்கியது நினைவிருக்கிறதா…
அப்போது தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் நீள கடற்கரை முழுதும் 20 அடி உயரத்தில் சுவர் எழுப்பினால் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றலாம் என்றவர்தான் ஜெயலலிதா.
இதை அன்றைய பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் மூலமும் தெரியப்படுத்தினார் ஜெயலலிதா.
இப்போது தெரிகிறதா.. “அம்மா”வுக்குத் தப்பாமல்தான் அமைச்சர்கள் அமைந்திருக்கிறார்கள்.
Also read :
ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான்!: ஜெ. அத்தை மகள் லலிதா அதிர்ச்சி தகவல்
நான்தான் ஜெயலலிதா மகள்: உச்சநீதி மன்றத்தில் பெண் மனு!
[youtube-feed feed=1]