சென்னை,
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று அதிமுக முன்னாள் எம்.பி.யும், முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பி.எச்.பாண்டியன் மற்றும் அவரது மகனும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு தலைவருமான மனோஜ் பாண்டியன் கூறியதாவது,
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா மறைவுக்கு ஸ்லோ பாய்சன் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறினார்.
இதற்கு எடுத்துக்காட்டாக மும்பையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை விளக்கி கூறினார்.
மும்பையை உள்ள பணக்கார வீட்டை சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை , அவரது சொந்தக் காரர்கள் சிலர் கண்டுபிடிக்க முடியாத ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றுவிட்டனர்.‘
அதை சாப்பிட்ட அவர், மும்பையில் இருந்து அவர் டெல்லி செல்வதற்குள் இறந்துவிட்டார். ஆனால் பரிசோதனையின்போது, அவரது உடலில் எந்த விஷம் கலந்ததற்கான ஆதாரமும் கண்டெடுக்கப்படவில்லை என்றார்.
அதுபோல ஜெயலலிதாவும் ஸ்லோ பாய்சன் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.