சென்னை:

‘‘எம்ஜிஆர் – அம்மா தீபா பேரவை’’ என்ற புதிய கட்சியை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கியுள்ளார்.


முன்னதாக ஜெயலலிதா பிறந்த தினமான இன்று புதிய அறிவிப்வை வெளியிடுவேன் என்று தீபா தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் இன்று காலை சென்னை தி.நகரில் பேரவையின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.

பின்னர், அனாதை இல்லங்களின் அன்னதானம் வழங்கினார். இதையடுத்து இன்று மாலை தனது புதிய கட்சியின் பெயர், கொடியை ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகரில் தற்போது வெளியிட்டார். புதிய கட்சிக்கு ‘‘எம்.ஜி.ஆர் – அம்மா தீபா பேரவை’’ என்று பெயரிட்டுள்ளார். புதிய கட்சியில் தீபா பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் கொடிய கருப்பு, சிகப்பு நிறத்தில், நடுவில் வெள்ளை நிற வட்டத்தில் எம்ஜிஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கிய புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தீபா கூறுகையில், ‘‘ஜெயலலிதாவின் வாரிசு நான் தான். என்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.