மறைந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்துவருகிறார்கள்.
இன்று காலை பத்து மணிக்கு, தி.மு.க., சட்டசபை எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் காலை 10 மணிக்கு தனது கட்சியினர் சிலருடன் காரில் வந்து இறங்கினார்.
சிறப்பு விருந்தினர்கள் செல்லும் பாதையில் அவர்அழைத்து செல்லபட்ட அவர், ஜெ.,உடல் அருகே சென்று, சிறிது நேரம் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார். பிறகு ஜெயலலிதாவின் பாதத்தை தொட்டு வணங்கினார்.
அஞ்சலி செலுத்தியவுடன் ஜெ.,உடல் அருகே நின்ற சசிகலாவை பார்த்து வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு சசிக்கலாவும் வணக்கம் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து ஜெ.,உடல் அருகே அமர்ந்திருந்த முதல்வர் பன்னீர்செல்வத்திடம், ஒரு சில நிமிடங்கள் பேசினார்.
பன்னீர்செல்வம் எழுந்து வந்து, ஸ்டாலினை வழியனுப்பினார்.