வெளிநாட்டினரை பணியில் அமர்த்துவது மாபெரும் குற்றமாக கருதப்பட்டுவரும் ஜப்பானில் அண்மை ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயம், செவிலியர், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 14 வகையான திறன் அடிப்படையிலான பணியாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்துவர 2019 ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை நீக்கி திறன் அடிப்படையிலான பணியாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை ஜப்பான் அழைத்துவர அனுமதியளித்து குடியேற்ற சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஜப்பானில் குடியிருக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட இவர்களுக்கு புதிய சட்ட திருத்தம் மூலம் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கியிருக்க தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதனால், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இங்கு வேலை செய்துவரும் பெருமளவிலான மக்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் மொத்த மக்கள் தொகை 12.58 கோடி அதில் 17.2 லட்சம் பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது, கொரோனா பரவலுக்குப் பின் வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகை குறைந்து போனதால் பல்வேறு வேலைகளுக்கு ஆட்கள் இல்லாத நிலை உள்ளது, இதனால் குடியேற்ற சட்டங்களில் ஜப்பான் அரசு திருத்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.