பீஜிங்: உலக பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் 60 சதவீத வருவாயை கொண்டுள்ள டாப்-10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. 2000ம் ஆண்டில் 7 டிரில்லியன் டாலர்களாக இருந்த சீனாவின் பொருளாதார வளம், தற்போது 120 டிரில்லியன் டாலர்களாக அபார வளர்ச்சியடைந்துள்ளது. இதில் இந்தியாவின் இடம் எங்கே உள்ளது என்பதுதான் தெரியவில்லை.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் உலக பொருளாதாரத்தின் நிகர மதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில், உலகிலேய பணக்காரர்கள் நாடாக சீனா முன்னிலையில் இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதுவரை அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.

மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் நிறுவனம்  உலகின் 60 சதவீத வருமானத்தை வைத்திருக்கும் நாடுகளின் இருப்பு நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டது. அதன்படி, கடந்த  2000 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அந்நாடுகளின்  தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தியது.

அதன்படி, 2000ம் ஆண்டில் 156 டிரில்லியன் டாலராக இருந்த உலகின் மொத்த பொருளாதார நிகர மதிப்பு 2020ம் ஆண்டில் 514 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளதுடன், இதில் மூன்றில் ஒரு பங்கு சீனாவின் பங்கு இருப்பதாக கூறியுள்ளத.

ஆய்வு மேற்கொண்ட கடந்த 2000ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார நிகர மதிப்பு 7 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. ஆனால், இந்த மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில், அதாவது 2020ம் ஆண்டுகளில், 120 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடுமையான முன்னேற்றம் என்று தெரிவித்துள்ளதுடன், இதுவரை உலகின் பணக்கார நாடாக இருந்து வந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, சீனா  முதலிடத்தை பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, 90 டிரில்லியன் டாலர் நிகர மதிப்புடன் அமெரிக்கா  2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெர்மனி 3வது இடத்திலும், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள்:-

சீனா: $113 டிரில்லியன்
அமெரிக்கா: $50 டிரில்லியன்
ஜெர்மனி: $14 டிரில்லியன்
பிரான்ஸ்: $14 டிரில்லியன்
யுகே: $7 டிரில்லியன்
கனடா: $7 டிரில்லியன்
ஆஸ்திரேலியா: $7 டிரில்லியன்
ஜப்பான்: $3 டிரில்லியன்
மெக்ஸிகோ: $3 டிரில்லியன்
ஸ்வீடன்: $2 டிரில்லியன்

மெக்கின்சியின் கணக்கின் படி உலகின் மொத்த நிகர மதிப்பில் 68% ரியல் எஸ்டேட்டில் உள்ளது. மீதி உள்கட்டமைப்பு, எந்திரம், சாதனங்கள், புத்திசார் சொத்துக்கள் மற்றும் காப்புரிமையில் உள்ளது.

இந்த பணக்காரர் நாடுகளில் பட்டிலில் இந்தியா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரம் மீண்டும் வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் கூவி வரும் நிலையில், ஆய்வு முடிவுகளோ வேறு மாதிரி தெரிவிக்கின்றன. இந்தபட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.