டோக்யோ

சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் நாட்டில் வர்த்தக ரீதியாக சுறா மீன்களை பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் சுறா மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.  இது சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்தது.  இடையில் விஞ்ஞான பரிசோதனைகளுக்குகாக எனக் கூறி  பலரும் சுறா மீன்களை பிடித்துள்ளனர்.  அவை அனைத்தும் கொன்று அழிக்கப்பட்டன.

இவ்வாறு இந்த 33 ஆண்டுகளில் சுமார் 200 முதல் 1200 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.   இந்நிலையில் ஜப்பான் நாட்டில் சுறா மீன்களை வர்த்தக ரீதியாக பிடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.   இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்கு ஜப்பான் அரசு சுறாவை  பிடிப்பது தமது நாட்டின் பாரம்பரியம் என பதில் அளித்துள்ளது.

ஆயினும் ஜப்பான் நாட்டில் உள்ள சுறா மீன் பிரியர்கள் இதை வரவேற்றுள்ளனர்.  இது குறித்து ஷிகெடோ ஹேஸ் என்னும் வயது முதிர்ந்த ஜப்பான் நாட்டவர், “நாடு எங்கும் உள்ள சுறா மீன்கள் பிரியர்களுக்கு இந்த தடை நீக்கம் மகிழை அளித்துள்ளது.   தற்போதுள்ள மக்களில் பலருக்கும் சுறா மீன்களை சமைப்பது மற்றும் உண்பதைப் பற்றி ஒன்றும் தெரியாமல் உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.