டெல்லி:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை வெறியாட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்திய வருகையை ரத்து செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளது.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே வரும் ஞாயிற்றுக்கிழமை  இந்தியா வருவதாக திட்டமிடப் பட்டிருந்தது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்தியா ஜப்பான் உச்சி மாநாடு நடைபெறும் என்றும்  ஏற்கனவே அறிவிக்கப்பட்டருந்தது.

இந்த நிலையில், தற்போது குடியுரிமை திருத்த மசோதா, காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் வன்முறை அதிகரித்துள்ள நிலையில், ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். இதில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.