டில்லி,
ந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். தற்போது 3 நாட்கள் பயணமாக ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
 
மூன்று நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு இன்று புறப்பட்டுச்சென்றார். அவரை விமான நிலையத்தில் முக்கிய அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
modi1
மோடியின் இந்த ஜப்பான் பயணத்தின் போது  இருநாடுகளுக்கு இடையே  வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதோடு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு மன்னர் அகிகிடோ, பிரதமர் ஷிண்டோ அபே ஆகியோரை முதலில் சந்தித்துப் பேசுகிறார்.
பின்னர், அந்நாட்டுப் பிரதமர் அபேவுடன் புகழ்பெற்ற ஷிண்கன்சென் புல்லட் ரயில் மூலம் கோபே நகருக்குப் பயணிக்கிறார். அத்துடன்  அதிவேக ரயில்களை உற்பத்தி செய்யும் கவாஸகி ரயில் தொழிற்சாலை வளாகத்துக்கும் மோடி சென்று பார்வையிடுகிறார்.