னவரி 25ந்தேதியான இன்று நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் கடை பிடிக்கப்படுகிறது. மக்களிடையே வாக்களிக்கும் உரிமையை பிரபலப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

1950 ஜனவரி 25ந்தேதி அன்றுஇந்திய தேர்தல் ஆணையத்தால், வாக்காளர் தினம் தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 2011 முதல்தான், இந்த நாளை அனைத்து பகுதிகளும் கொண்டாட அறிவுறுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

நமது வாக்கு நமது உரிமை! என்று  வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்த்துவதே இதன் நோக்கம். ஜனநாயக நாட்டில், வாக்களிப்பது எந்தளவுக்கு அவசியமோ, அதே போல 18 வயது நிரம்பியவர்கள், தங்கள் பெயரை வாக்காளராக இணைத்து கொள்வதும் அவசியம். அதை மக்களிடையே எடுத்துச் சென்று விழிப்புணர்ச ஏற்படுத்தும் வகையில் இன்றைய நாள் வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்கள், அதை வாக்காளர்கள்  எப்படி எதிர்கொள்ள வேண்டும், தேர்தலின்போது மக்களின் சிந்தனை, வளரும் சமுதாயத்தினரின் வாக்குரிமைகளை நிறைவேற்ற இருக்கும் எளிய வழிமுறைகள், நம்மை ஆளும் ஆட்சியாளர்களை தேர்வு செய்வது எவ்வாறு என்பது போன்றவற்றை தீர்மானிக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்,  ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி எதிர்கால இந்தியாவை வலிமையாக மாற்றும் நோக்கில், நமது வாக்கு, நமது உரிமை என்று தேசிய  வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.