ஜனவரி-17,  இன்று அமரர் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள். சாதாரண நடிகராக வாழ்வைத் தொடங்கி, தமிகத்தின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்து மக்கள் நலப்பணியாற்றி தமிழக மக்களின்மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்.

வாழும் போது சிலர் வரலாறாக வாழ்ந்து மறைந்து விடுகிறார்கள். சிலர் சரித்திரமாகிறார்கள். அப்படிபட்டவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர்.

1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

முதலில் கட்சியின் சாதாரண அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

திமுக நடத்திய  கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி… திமுகவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.  திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமைக்கு தனி தொண்டர்கள் பட்டாளமே திரண்டது.

1952ம்  தி.மு.க. வில் இணைந்த எம்ஜிஆர், 5 ஆண்டுகளுக்கு பிறகு, 1957ம் ஆண்டுதான்  தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  1958ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு, -சென்னை வருவதாக இருந்தபோது,  நேருவுக்கு எதிராக  கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. அறிவித்தது.

அதையடுத்து திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  அப்போதுதான் முதன்முறையாக எம்ஜிஆல்ர கைது செய்யப்பட்டு, சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது 6 நாட்கள் சாதாரண சிறைக்கைதியாக  இருந்தார்.

பின்னர் 1962 – இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது. அதற்கு பரிசாக எம்ஜிஆருக்கு சட்ட மேலவை (1962)  பதவி வழங்கி கவுரவிக்கப்ப்டடார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எம்ஜிஆர், “காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி” என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட  திமுகவில் எம்ஜிஆர் மீது பல்வேறு சர்சைகள் தொடர்ந்தன. இருந்தாலும் திமுக தொண்டராக தனது பணியை தொடர்ந்து வந்தார்.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர், 1967 – தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராகவும் அண்ணாவாவ்  நியமிக்கப்பட்டார்.
1971 – மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையே பிணக்கு நிலவி வந்தது.இதையடுதுது,  1972 ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இதனால் வெகுண்டெழுந்தஎம்ஜிஆர், திமுகவுக்கு எதிராக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை 1972ம் ஆண்டு தொடங்கி, 1974ம் ஆண்டு  புதுவை தேர்தலில் போட்டியிட்டு  ஆட்சி அமைத்தது. இது எம்ஜிஆர் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு என்பது தெரிய வந்தது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் எம்ஜிஆரின் செல்வாக்கு பயத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து,  1977ம் ஆண்டு  புதுவையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு  இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால், 1980ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தநிலையில்,  அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இருந்தாலும், அதே ஆண்டு (1980)  தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று  அ.இ.அ.தி.மு.க. மீண்டும்  ஆட்சி அமைத்தது.

இதையடுத்து 1981ம் ஆண்டு  மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தி உலக தமிழர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றார்.

1982  மாநிலத்திற்கு அரிசி தேவையை மத்தியஅரசுக்கு அறிவுறுத்தும் வகையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த நிலை யில்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள புரூக்லின்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்தே தேர்தலில் போட்டியிட்டு 1984ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் . போட்டியிட்டு அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைத்தது.

பின்னர், இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்டு, அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில்,  1987 ம் ஆண்டு,  இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி – இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.

இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர்  டிசம்பர் 24ந்தேதி 1987ம் ஆண்டு தனது இன்னுயிரை நீத்தார்…

இன்று அவரத 103வது பிறந்தநாள் அதிமுகவினரால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

today!