நடிகை ஸ்ரீதேவி-போனிகபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தியில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.

அவர் நடித்துள்ள ‘ரக்’ என்ற படம் அடுத்த மாதம் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் மீது ஜான்வி, பெரிதும் எதிர் பார்ப்பு வைத்துள்ளார்.

“எனது நடிப்புக்கு தீனி போட்ட படம் என்று ‘ரக்’ படத்தை சொல்லலாம், இதுவரை பார்க்காத ஜான்வி கபூரை இதில் பார்க்கலாம்” என்கிறார், அவர்.

இந்தியில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சாரா அலி கானும், அனன்யா பாண்டேயும் “எங்கள் போட்டியாளர் ஜான்வி தான்” என கூறி இருந்தார்கள்.

இது குறித்து கேட்டபோது “சினிமாவில் போட்டி அவசியம். நான் போட்டிக்கு தயார்” என ஜான்வி குறிப்பிட்டார்.

ஜான்வி இப்போது ‘தொஸ்தானா – 2’ மற்றும் ‘குட்லக் ஜெர்ரி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

– பா. பாரதி