
பாலா இயக்கத்தில் வெளியான ’அவன் இவன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்று நிகழ்ச்சியின் இறுதி வரை இருந்தார்.
இவர் கேரியரை தொடங்கிய நாள் முதலே தன்னுடைய பெயரை ஜனனி ஐயர் என்றே குறிப்பிட்டு வந்தார். இந்நிலையில் அவருடைய பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலிருந்த `ஜனனி ஐயர்’ என்ற பெயரை ‘ஜனனி ஹியர்’ என்று மாற்றியதோடு, “மாற்றம் ஒன்றே மாறாதது; என்றும் ஒற்றுமையுடன் ஜனனி” என்கிற கேப்ஷனுடன் தன்னுடைய புகைப்படத்தை அப்லோடு செய்திருக்கிறார்.
#BeTheChangeYouWantToSee pic.twitter.com/3igfO0I5Ly
— Janani (@jananihere) May 28, 2021
Patrikai.com official YouTube Channel