மே 19ந்தேதியான இன்று, தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி இராமச்சந்திரன் நினைவு தினம் …
24 நாட்கள் தமிழக முதல்வராக ஆட்சி செய்த, மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான ஜானகி ராமச்சந்திரனின் 24வது நினைவு தினம்.
கேரள மாநிலம் வைக்கத்தில் நவம்பர் 30, 1923ம் ஆண்டு பிறந்தவரான ஜானகி இராமச்சந்திரனின் இயற்பெயர் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி. அவரது மாமா பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாபனாசம் சிவன் ஆவார். 1936 ஆம் ஆண்டில், அவரது தந்தை, இசைக்கலைஞர் ராஜகோபால் ஐயருக்கு மெட்ராஸ் மெயில் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது, அவர்கள் சென்னை வந்தனர். விஎன்ஜானகி ஆரம்ப காலத்தில் திரைப்பட நடிகையாக இருந்தார். எம்ஜிஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளவர். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனின் மனைவியாக மாறினார்.
எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்க அதிமுக வில் ஏற்பட்ட மோதலில், ஜானகி இராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் 1987 இல் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் 24 நாட்கள் மட்டுமே அவரது ஆட்சி நீடித்த நிலையில், ஆட்சி கலைக்கப்பட்டது.
அதையடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வந்த வி.என்.ஜானகி, 1996ம் ஆண்டு மே 19ந்தேதி இயற்கை எய்தினார். அவரது 24வது நினைவு தினம் இன்று.
தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்த ஜானகி இராமச்சந்திரனை, அவரது கட்சியான அதிமுக அடியோடு மறைந்துவிட்டதுகாலத்தின் கோலம்…