நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஜனகராஜ்.

எழுபதுகளில் உருவான புதிய அலைகள் சினிமா தொடங்கி கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நண்பராக பல படங்களில் நடித்து வந்த ஜனகராஜ் அண்மைக்காலமாக அமெரிக்காவில் பிள்ளைகளுடன் வசித்து வந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது ட்விட்டரில் கணக்கு தொடங்கியுள்ளார் .

தற்போது 66 வயதான ஜனகராஜ் தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடித்திருந்ததை நம்மால் நினைவில் கொள்ள முடிகிறது.

https://twitter.com/ActorJanagaraj/status/1395001647496060931