சென்னை: ஜனநாயகன் படம் விவகாரம் மற்றும் கரூர் சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணை வளையத்தில் தவெக தலைவர் விஜய் சிக்கியிருப்பது குறித்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

புதிதாக அரசியல் கட்சியை தொடங்கி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறி தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிகார போதையை விதைத்துள்ள தவெக. தலைவர் விஜய் கட்சியுடன் சில கட்சி தலைவர்கள் கூட்டணி வைக்க ஆசைப்பட்டு வருகின்றனர். இந்த ஆசை காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களிடமும் எழுந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் ஆட்சியில் பங்கு தேவை என்பதை தொடர்ந்து பேசி வருகின்றனர் இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை வெளியிட சென்சார் போர்டு தடையாக இருந்து வருகிறது. இதனால், பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் வெளியாகாத நிலை உருவாகி உள்ளது. ஆனால், இது தொடர்பாக விஜய் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் ராகுல் காந்தி தொடங்கி காங்கிரஸ் எம்பிக்கள், நிர்வாகிகள் அனைவரும் ஜனநாயகன் தொடர்பாக பேசிவிட்டனர். அவர்களுக்கு விஜய் தரப்பிலோ, தவெக தரப்பிலோ ஒரு நன்றி கூற சொல்லவில்லை.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங். எம்.பி.கார்த்தி சிதம்பரம், விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து கருத்தை தெரிவித்துள்ளார். ல் சென்னையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கார்த்தி சிதம்பரம் பேசுகையில், பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை. படங்கள் வெற்றி, தோல்விகளை அடையலாம். ஆனால் சினிமாவுக்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதேபோல் ஜனநாயகன் படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நான் ஜனநாயகன் படத்தை பார்க்க போவதும் இல்லை.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்ற குரல் ஓங்கி ஒலிப்பது தனித்துவம் வாய்ந்த உலகில் யாருக்கும் உதிக்காத சிந்தனை இல்லை என்றவர், கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயை சிபிஐ அழைத்து விசாரித்ததில் தவறு இல்லை என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]