(விவசாயிகள் போராட்டம் – பைல் படம்)

சென்னை,

டெல்டா விவசாய பாசனத்துக்காக காவிரியில் இருந்து 7 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என, கர்நாடக முதலமைச்சருக்கு தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா பதில் தெரிவித்திருந்தார். அதுபோல ரஜினியின் நெருக்கி நண்பரான கன்னட நடிகருமான அம்பரீஷ்,  தமிழக முதல்வரின் கோரிக்கையை பொருட்படுத்த வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர், கர்நாடகாவை, தமிழகத்துக்கு  தண்ணீர் திறக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசியல் கட்சியினரும் பிரதமருக்கு கர்நாடகாவை தண்ணீர் திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் 27ந்தேதி, கர்நாடகாவை தண்ணீர் திறக்க வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

தஞ்சையில் நடைபெற்ற அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தில் இந்த போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட்டு, அதன்படி காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஜன.27ம் தேதி

தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர் மாவட்டங்களில்  ரெயில் மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருகும் சம்பா பயிர்களை காக்க கர்நாடக அரசிடம் 15 டிஎம்சி தண்ணீர் பெற்றுத் தர கோரியும்,  காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசிடம் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த கோரியும் இந்த போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் கூறி உள்ளனர்.