ஜம்மு – காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி என அம்பலம்

Must read

ஜம்மு-காஷ்மீர்:
ம்முவில் பிடிபட்ட லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதி ஒருவர் பாஜக நிர்வாகியாக இருந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ரியாஸி பகுதியில் உள்ள கிராம மக்கள் இரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள், கைத் துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுகல் செய்யப்பட்டன.

அந்த இருவரில் ஒருவரான தாலிப் ஹூசைன் ஷா என்பவர் பாஜகவில் நிர்வாகியாக உள்ளார். அவர் கடந்த மே 9-ஆம் தேதி சிறுபான்மைப் பிரிவு சமூக ஊடக பொறுப்பாளராக இருந்தவர் என்று தெரிய வந்ததால், ஜம்மு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article