டெல்லி: காஷ்மீரின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்புக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியால் 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் குழுவுக்கு மத்தியஅரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த அமைப்பு தற்போது மசரத் ஆலம் பட் தலைமை தாங்கிய இயக்கப்பட்டு வரும் நிலையில்,  அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வந்த,  ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை பரப்புவதாகவும் தடை செய்யப்பட்ட அமைப்பாக தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பை இன்று (டிச.31) மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக ஏற்கனவே  மறைந்த சையத் அலி ஷா கிலானி  இருந்து வந்த நிலையில், தற்போது, மசரத் ஆலம் பட் தலைமையில் இயங்கி வருகிறது. மசரத் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,  எனவே,  இந்த அமைப்பை இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா  தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில் செயல்படும் தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பு சட்ட விரோத அமைப்பாக யு.ஏ.பி.ஏ (UAPA – The Unlawful Activities (Prevention) Act, 1967.) சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கான முயற்சிகளை இந்த அமைப்பு எடுத்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். “இந்தியாவிலிருந்து ஜம்மு – காஷ்மீரைப் பிரித்து இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதே TeH நோக்கம். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பது, இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கல் வீசுவது, பாகிஸ்தான் அமைப்புகளுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக நிதி திரட்டுவது, இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்துவது மற்றும் இந்தியாவில் அரசியலமைப்புக்கு அவமரியாதை செய்வது போன்ற செயல்களில் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என்ற ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே தேசவிரோத உணர்வுகளும், இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கள் பரப்ப வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு சதவீதம் கூட இடம் அளிக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா தனது X வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.