ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: புதிய சட்டத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்

Must read

டில்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கும் புதிய சட்டத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக்கூறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த  சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.
download
அதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் இயற்ற மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்திருந்தது.  மத்திய அமைச்சரவையின் அந்த பரிந்துரையை  இன்று சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது.
வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இதற்கான புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே வரும் 2017ம் ஆண்டு பொங்கல் சமயத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இராது.

More articles

Latest article