தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த  தடை இருப்பதை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது..
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் கொண்ட அமர்வின் முன் மத்திய அரசு அளித்த மனுவில், “ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு. மகாபாரத காலத்தில் கூட அது கடைபிடிக்கப்பட்டது.  கடவுள் கிருஷ்ணா, மாடுகளை அடக்கியதாக இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது.” என்று  மத்திய அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “ தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பல நூற்றாண்டுகளாக விளையாடப்படுகிறது. கட்டுப்பாடுகளுடன் அதை அனுமதிக்க வேண்டும்.  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கும் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படுவது உண்மையல்ல” என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளது.
a
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்னும் மனுத்தாக்கல் செய்யவில்லை. அதே நேரத்தில், தமிழக அரசு சார்பில் வாய்மொழியாகத் தெரித்த  கருத்துக்களில், பொங்கல் பண்டிகையின்போது, கலாசார மற்றும் மத ரீதியான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என்றும், அதை பாரம்பரிய நடைமுறை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது..
இதற்கு நீதிபதிகள், “”குழந்தைத் திருமணம் கூட முன்பு பாரம்பரிய நடைமுறையாக இருந்தது. அதற்காக, அதை இப்போது அனுமதிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.
தமிழக அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதியளித்தது.   அடுத்த விசாரணை, ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும்.