ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: இயக்குநர் வ.கவுதமனிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

Must read

சென்னை:

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமனை விசாரணைக்காக மீண்டும் காவல்துறை அழைத்திருக்கிறது. இது குறித்து தெரிவித்த வ.கவுதமன், “ஜல்லிக்கட்டு போராட்டம் சம்மந்தமாக ஏற்கனவே மதுரை கிரைம் பிராஞ்ச் சிஐடி என்னை விசாரித்து முடித்துவிட்டது. இந்த நிலையில் இன்று ( 13. 06. 2017 ) செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை எக்மோர் கிரைம் பிராஞ்ச் சிஐடி தலைமை அலுவலகத்திற்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். இன்று மாலை அவர்களை சந்திக்க செல்கிறேன்” என்று தெரிவித்தார்.

 

 

More articles

Latest article