சென்னை,

மிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமும்  குதித்து தனது ஆதரவை உறுதிபடுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு பீட்டாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள், ஐ.டி.ஊழியர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் அனைத்து கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மெரினாவில் மாணவர்கள், மாணவி கள், இளைஞர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல், அதே நேரத்தில் ஒற்றுமையாகவும் எந்தவித அசம்பாவிதம் நிகழாமலும் அமைதியான முறை யில் தங்களது எதிர்ப்பை மத்திய மாநில அரசு களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

மாணவர்கள் கூட்டம் மெரினாவை நோக்கி படை யெடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது பங்களிப்பை உறுதி செய்து போராடி வருகின்றனர்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் வள்ளி யம்மை எஞ்சினியரிங் கல்லூரி மாணவ மாணவி கள் பல்கலைக்கழக அருகே உள்ள ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக முதல்வர் மற்றும்  பல்கலைக்கழக ஊழியர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது, ஜல்லிக்கட்டுக்கு நீதி வேண்டும், தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்போம் என்று கோஷமிட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்படுகிறது.