“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரபல நடிகர்கள் அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால்,நோட்டு தடைக்கு உடனடியாக ஆதரித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டு பற்றி மட்டும் வாய்திறக்காகது ஏன்” என்று பல தரப்பிலிருந்தும் கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், “கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள்” என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.

 

ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல், பாடலாசியர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ரஜினி, “ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம். கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது. என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள். பெரியவர்கள் ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள். அவற்றை நாம் காப்பாற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகளை விதியுங்கள், ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்” என்றார்.