பரவுகிறது போராட்டம்… சென்னை ஓஎம்ஆர் ரோடு முடக்கம்!

Must read

சென்னை,

ல்லிக்கட்டு போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டம் பரவி வருகிறது.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சென்னை ஓஎம்ஆரில் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொண்ட போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை மெரினால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை,  இன்று காலை முதல் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னையில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் எஸ்ஆர்பி டூல்ஸ் அருகே  பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஓஎம்ஆர் ரோடு முடக்கப்பட்டு உள்ளது.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையில் நிற்கிறது. இதன் காரணமாக வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே மறியல் நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article